மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க இட ஒதுக்கீடு!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

0
94
Reservation of seats for differently abled persons!! Tamilnadu government action order!!
Reservation of seats for differently abled persons!! Tamilnadu government action order!!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க இட ஒதுக்கீடு!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு  வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச ஸ்கூட்டர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநில அரசுகளும் அவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் ஜூலை 28 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த முகாமில் அவர்களில் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த மாற்றுத்திறனாளி குறை கேட்பு முகம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழக சட்டமன்ற பேரவையில் 2023 ஆம் ஆண்டு முதல்  2024 வரை மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பில் மாற்றுதிறனாளிகளுக்கான நான்கு  சதவீத கீழ் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அரசுத் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!!
Next articleதுணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!