ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்!! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

0
212

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்:

ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் ஏடிஎம் இயந்திரங்களை பணபரிவர்த்தனை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

மேலும், பொதுவாக ஏடிஎம்மில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனையை செய்வதற்கு 5 முறையும் மற்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று முன்பு இருந்தது. இதனை தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூல் செய்யப்படும்.

இதனைத் தொடர்ந்து இந்த நிலையில் ஏடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர் வேறு வங்கியின் ஏடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம் மூலமாக பணத்தை எடுக்கும் போது அல்லது பணம் அல்லாத பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது, அந்த வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி செலுத்தும் கட்டணம் தான் இன்டர்செஞ்ச் கட்டணம் ஆகும்.

இந்த கட்டண உயர்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்மூலமாக மற்றொரு வங்கியில் வாடிக்கையாளர் ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் பொழுது 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று இதன் மூலம் தெரிகிறது. இதனை மறக்காமல் ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து கட்டணத்தை மனதில் நிறுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

Previous articleஇப்படி ஒரு நடிகை இருக்கிறதையே மறந்து போய்விட்டோம்!! ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை!!
Next articleபெட்ரோல் பங்கில் வேலைப் பார்த்த நடிகை பாகுபலி அனுஷ்கா ஷெட்டி!