சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

Photo of author

By Preethi

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

Preethi

Updated on:

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி இதுவரை இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில் தற்போது தனது அமைச்சர் பதவியை முற்றிலுமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தொடர்ந்தது. அதன்படி செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

கடந்த ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையை மேற்கொண்ட அமலாக்கத்துறை ஜூன் 14ஆம் தேதி அவரை கைது செய்தது. இதனை அடுத்து புழல் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி தனது துறைகளை இழந்து இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்து வந்தார். தொடர்ந்து செந்தில் பாலாஜி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுவரை 19 முறை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தற்போது தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.