#Resign_Stalin: பதவி விலகும் முதல்வர்..ஸ்டாலின் இடத்தில் சத்யராஜ்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.இந்த மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியை சேர்ந்த மூன்று பேர் கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளனர். இதனை வாங்கி அருந்திய நபர்கள் வயிற்று வலி, எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அம்மாவட்ட மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒருவர் பின் ஒருவராக அனுமதியாகிய நிலையில் அடுத்தடுத்து வரிசையாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் வந்தனர்.
இதன் விவகாரமானது தமிழக மத்தியில் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாக அனைவரின் கொந்தளிப்பும் திமுக மீது உள்ளது.திரை நட்சத்திரங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் திமுக மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஒழுங்கு ஆட்சியின்மை, கட்டுப்பாடற்ற ஆளும் கட்சி, போதைப்பொருள் ஊடுருவல் என பல விதங்களில் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இதனையெல்லாம் சமாளிக்க முடியாமல் திக்கு முக்காடி போன ஆளும் கட்சி ஒரேடியாக இதனை மூடி மறைக்கும் வகையில் இழப்பீடு தொகையை 10 லட்சமாக அறிவித்துள்ளது.
இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் பட்சத்தில் திமுக நடவடிக்கை எடுக்காததால் தான் இவாறான மரணங்கள் என்ற அழுத்தமும் கூடிக் கொண்டே போகிறது.இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரிசைன் ஸ்டாலின் #Resign Stalin என்ற ஹாஸ்டாக் ஆனது ட்ரெண்டிங்கில் முதலாவதாக உள்ளது.குறிப்பாக சத்யராஜின் அமைதிப்படை படத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சவர்களை கைது செய்த காவல்துறையிடம், இதையெல்லாம் செய்யவில்லை என்றால் எப்படி சம்பாதிப்பது என்ற வீடியோவை ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை டாக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
மேற்கொண்டு சாராய மாடல் திமுக, DMK பெயில் உள்ளிட்டவைகளும் ஹாஷ் டாகா க உள்ளது.கள்ளச்சாராயம் அருந்தி 35-ற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து தகமிழகமே கொந்தளித்த நிலையில் twitter ட்ரெண்டிங்கில் தற்பொழுது ரிசைன் ஸ்டாலின் என்பது பேசுப் பொருளாகியுள்ளது.