டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு

0
129

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

குறிப்பாக சட்டத்தை அவர் தனக்கு சாதகமாக வளைத்து கொண்டதாகவும் உக்ரைன் அதிபருக்கு எதிராக சதி செய்ததாகவும் ரஷ்யாவுடன் இணைந்து அவர் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது

இதனை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் தீர்மானம் வெற்றி பெற்றால் அதிபர் டிரம்ப் பதவி விலக நேரிடும்

இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர்களும், தீர்மானத்திற்கு எதிராக 179 பேர்களும் வாக்களித்தனர். இதனை அடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் செனட் சபையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்படும். இந்த தீர்மானத்திற்கு செனட் சபையிலும் ஆதரவு கிடைத்தால் டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவியில் இருந்து விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறுவது சந்தேகமே என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Previous article“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடையில்லை” – சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Next article“பல நாள் திருடர்கள் ” – திஷா கொலை குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்