“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடையில்லை” – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

0
62

நாடுமுழுவதும்  பெரும்  சர்ச்சையை ஏற்படுத்திவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் அதற்க்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த சட்டம் தொடர்பான விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை,இன்னும் முழுமையாக இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை, அதனால் தடை தேவையில்லை” என மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார். இதையடுத்து சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க முடியாது என அமர்வு அறிவித்தது.

மேலும் இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களின் மீது, பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை  வரும் ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

author avatar
Parthipan K