புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகை வரவுள்ளது அதனால் பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடும் பொழுது அதிகளவு கூட்டம் சேர்வதற்கு வாய்ப்புள்ளது.அதனால் கொரோனா பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, முககவசம் அணிதல்,கிருமி நாசினி போன்றவைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.சீனா ,தைவான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றார்.