மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

0
119
Alert people! Corona infection confirmed for two people who came to this town!
Alert people! Corona infection confirmed for two people who came to this town!

மக்களே அலார்ட்! இந்த ஊருக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சீனா,ஜப்பான், தென்கொரியா,அமெரிக்கா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎப் 7 கொரோனா தொற்று மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் தான் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திருப்பி வருகின்றனர்.

ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதினால் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மூன்று நாள்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்  இலங்கையிலிருந்து நேற்று காலை மதுரை வந்த விமானத்தில் மொத்தம் 72 பயணிகள் பயணம் செய்தனர்.அவர்களில் ரேண்டம் முறையில் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு நேற்று மாலை வெளியானது.அதில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த விருதுநகரை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அவருடைய 5 வயது பெண் குழந்தை உட்பட இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவருடைய 15 வயதுடைய மற்றொரு மகளிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யவில்லை.உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவால் தான் அவர்கள் பாதிக்கபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இலங்கை விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டு வீடுகளில் 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பாங்காக்கிலிருந்து வந்த ஒருவருக்கு தொற்று வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.அவருடைய மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பத்து பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K