புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை!
சென்னையில் சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அதில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். மேலும் அவர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டறியும் விதமாக அனைத்து இடங்ககளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து யார் போக்குவரத்து விதிகளை மீறி உள்ளனர் என அவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து அவருடைய வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பபடும்.
மேலும் தற்போது குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதில் சிசிடிவி பெரும் பங்காற்றி வரும் நிலையில் அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகங்களை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 15 க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மூடப்படும், இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி,ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் இரவு 1 மணி வரை மட்டுமே மக்கள் புத்தாண்டை கொண்டாட வேண்டும்.
அதனை தொடர்ந்து இரவு மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் மேடை அமைக்க தடை.15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.