கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்!

0
185
Restrictions released just in time for Christmas! Penalty for violation!
Restrictions released just in time for Christmas! Penalty for violation!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்!

சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அந்த உத்தரவில் நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளது.அதனை பொதுமக்கள் அமைதியாகவும்,பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும்.அதற்காக சுமார் 8,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் பெண்கள் மற்றும்  குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 24.12.2022 அன்று இரவு முதல் பொதுமக்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால் அன்று இரவு முதலே 350 தேவாலயங்களின் அருகிலும் சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழு மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம்,பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம்,பாரிமுனை அந்தோணியர் தேவாலயம்,அண்ணாசாலை புனித ஜார்ஜ் தேவாலயம்,சைதாப்பேட்டை,சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் பகுதியாக உள்ளது.அதனால் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை பெருநகர முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.அங்கு பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது,மதுபோதையில் வாகனம் ஓட்டுவது,போக்குவரத்து விதிமீறல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ANPR மற்றும் CCTV கேமராக்கள் மூலம் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கவனமாக மக்கள் கொண்டாட வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleபள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!!
Next articleபல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!