Cricket: இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய விரிதிமான் சாஹா ஓய்வை அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடிய முக்கிய வீரர்களில் ஒருவர் விரிதிமான் சாஹா அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் நீண்ட நாட்களாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்திய சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.
அதனால் அவர் மாநில அளவில் உள்ளூர் போட்டிகளிலும், ஐ பி எல் தொடர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது சாஹா நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இதுவே எனது கடைசி தொடர் என அவரது ஓய்வை அறிவித்துள்ளார்.
இவர் இந்திய அணியின் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது இவரின் வயது 40 ஆகிறது. இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 3 சதம் மற்றும் 6 அரைசதம் அடித்து இருக்கிறார்.இதுவரை டெஸ்ட் போட்டியில் 1353 ரன்கள் எடுத்துள்ளார்.
இவர் இதுவரை 9 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அதிலும் 5 இன்னிங்ஸில் மட்டும் களமிறங்கி 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய அணியில் இவர் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார் ஆனால் இவர் பேட்டிங் சரியாக செய்யாத காரணத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.