cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் நடைபெறும் தொடர் நடந்து முடிந்த பின் முக்கிய மூன்று வீரர்களுக்கு ஓய்வு.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடிய பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு மங்கி கொண்ட வருகிறது.
இந்த தொடர் முடிந்த பின் மூத்த வீரர்களான விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்களுக்கு பிப்ரவரி 6 ம் தேதி நடக்கும் இங்கிலாந்து ஒரு நாள் போட்டி தொடரில் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி க்கு எதற்கு ஓய்வு அவர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அவர்கள் மோசமான பார்மில் உள்ளனர். பும்ராவுக்கு மட்டும் ஓய்வு போதும் என்று விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.