5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

0
229
Retrenchment with 5 months salary! Information released by Amazon!
Retrenchment with 5 months salary! Information released by Amazon!

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் வாங்கினார்.அதனையடுத்து அவர் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது.இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் அலுவலகங்களில் 18 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதிக்கு பிறகு இதற்கான தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் பெங்களூரு,குருகிராம் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என மனிதள துறை, தொழில்நுட்பத் துறை என்று பல துறை ஊழியர்களும் பாதிக்கப்படுபவர்கள்.

அந்தவகையில் இந்தியாவில் சராசரியாக 1000 என ஆரம்பித்து உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் அமேசான் ஊழியர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்படவுள்ளனர் என கூறப்படுகின்றது.முன்னதாக வேலை பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக லிங்க்டு இன் போன்ற பக்கங்களில் தாங்கள் வேலை இழந்துள்ளனர்.அவர்கள் புதிய வேலைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை புதிதாக சேர்ந்தவர்கள் தொடங்கி பல ஆண்டுகள் அனுபவம் உள்ளோர் வரை பலரும் அடங்குவார்கள்.வேலையில் உள்ளவர்களுக்கு முறையாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.குறிப்பிட்ட நாள் ஒதுக்கி அன்று நேரில் வந்த பணிநீக்கத்திற்கான விளக்கத்தை பெற்றுச் செல்லலாம்.பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleநியாய விலை  கடை ஊழியர்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!
Next articleவிக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா?