இஞ்சி இடுப்பழகி’ பாட்டில் கமல் இதை செய்ய சொல்லியும் மறுத்த ரேவதி!! அந்த 2:14 நிமிடங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாராம்!!

Photo of author

By Divya

இஞ்சி இடுப்பழகி’ பாட்டில் கமல் இதை செய்ய சொல்லியும் மறுத்த ரேவதி!! அந்த 2:14 நிமிடங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாராம்!!

நடிகர்,நடிகைகள் நடிப்பைத் தாண்டி சிறந்த பாடகர்,திரைக்கதை எழுத்தாளர்,இயக்குநர் என பலவற்றில் திறமையானவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.

இதில் நடிகர்,நடிகைகளின் குரலின் வெளியாகும் பாடல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி கேட்பது அதிகரித்து வருகிறது.இன்று,நேற்று அல்ல பல வருடங்களாக இது நடந்து வருகிறது.கமல் நன்றாக பாட்டு பாடக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.இவர் குரலில் வெளியாகி இன்று வரை அனைவரின் பேவரைட் பாடலாக இருப்பது “இஞ்சி இடுப்பழகி” தான்.கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கும்.

படத்தில் தனக்கு ஜோடியான ரேவதியுடன் இந்த பாடல் காட்சியில் அழகாக ரொமான்ஸ் செய்திருப்பார் கமல்.மக்கள் மனதை கொள்ளை கொண்ட இந்த பாடலில் ரேவதி தனது சொந்த குரலில் முதல் இரு வரிகளை பாடி இருப்பார்.

பாடல் காட்சியில் இஞ்சி இடுப்பழகி பாடலை பாடும்படி கேட்பார் கமல்.அதற்கு இஞ்சி இடுப்பழகி என்று பாடத் தொடங்கும் ரேவதியின் கையை கமல் பிடித்த உடன் பாட முடியாமல் தடுமாறுவார்.பின்னர் ‘காத்துதாங்க வருது’ என்று அவர் சொல்லும் அந்த வசனம் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும்.

இது குறித்து ரேவதி அளித்த பேட்டியில் இந்த பாடல் ரெக்கார்டிங் போது கமல் தன்னுடன் இணைந்து பாடும்படி கேட்டார்.ஆனால் தான் பாட முடியாது என்று மறுத்தேன்.அதன் பின்னர் ஜானகி அவர்கள் தான் இந்த பாடலை பாடினார்.பாடலை கேட்கும் பொழுது ரொம்ப ஈஸியாக இருந்தது.ஆனால் பாடல் காட்சியின் போது ஜானகி அவர்கள் பாடியதற்கு ஏற்றவாறு உதடுகளை அசைக்க மிகவும் சிரமப்பட்டேன்.அப்பொழுது கமல் தான் எப்படி உதடுகளை அசைக்க வேண்டும் என்று செய்து காட்டி உதவினார் என ரேவதி கூறி இருக்கிறார்.