வெளியான அந்தரங்கம்!! 308 பெண்களுடன் இருந்த லியோ பட நடிகர்!!
இப்பொழுது தளபதி விஜய் அவர்கள் ,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் தற்பொழுது முடிவடையும் நிலையில் உள்ளது.
இப்படத்திற்கான ப்ரோமோஷன் ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ம் தேதி லியோ படத்தின் முதல் பாடலை வெளியிடுவதற்கான பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த படமானது உச்சகட்ட எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்துகிறது. இப்படி படத்தின் பணிகள் பற்றி வெளிவரும் தகவல் ஒருபுறம் இருக்க இப்படத்தில் நடிப்பவர்களை பற்றிய விஷயங்களும் வெளிவந்து சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு வருகிறது.
முதலில் அர்ஜுன், படபிடிப்பு தளத்தில் ஓவர் ஆட்டிடியூட் காட்டி வருகிறார் என்ற செய்தி வெளிவந்த நிலையை அடுத்து இன்னொரு நடிகரை பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் நடிகர் சஞ்சய் தத் என்ற பாலிவுட் நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் லியோ படத்தில் நடிக்க இருக்கிறார்.இது குறித்து அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்ட நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களும் இப்பொழுது வெளியாகி இருக்கிறது.
சஞ்சய் தத் சிறை தண்டனை பெற்றவர் என்றும் இவர் எப்போதும் சர்ச்சையில் சிக்கி கொண்டே இருப்பார் என்று சமுக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
அதோடு இவரின் வாழ்க்கை வரலாறு ஒரு படமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தபடத்தில் சஞ்சய் தத் காதபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இது இந்தியில் சஞ்சு என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அந்த படத்தில் அவர் 308 பெண்களுடன் டேட்டிங் செய்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டது.இது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் சஞ்சு படத்தின் இயக்குனர் இதனை உறுதிப்படுத்தினார். பெண்களிடம் செண்டிமெண்டாக பேசி அவர்களை தனது வலையில் விழ செய்வதில் மிகவும் கில்லாடியானவர்.
இந்த தகவல்கள் ஏற்கனவே பாலிவுட்டில் வெளிவந்து பரபரப்பான சூழலில் லியோ படத்தின் மூலம் தற்பொழுது தமிழ் ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது .