காப்பியில் குளியலா!! வைரலாகும் காஜலின் வீடியோ!!

0
97
Bathe in coffee!! Kajal's video goes viral!!
Bathe in coffee!! Kajal's video goes viral!!

காப்பியில் குளியலா!! வைரலாகும் காஜலின் வீடியோ!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்களில் சூர்யா, விஜய் மற்றும் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவரின் படங்கள் நிறைய வெற்றி வாகையை சூடி உள்ளது. மேலும் நடிகை காஜல் அகர்வால் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்று வருகிறார்.

இவருக்கென்று பெரும் அளவில் ரசிகர் கூட்டங்கள் உள்ளது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பபை பெற்ற இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்த குழந்தைக்கு “நீல்” என்று பெயர் சூட்டி அதனை சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால், அவரின் சமூக வலைதளங்கலான இண்ஸ்டாகிராம், டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக தான் இருக்கிறார்.
தற்பொழுது நடிகை காஜல் அகர்வால் காப்பியில் விழுந்து குளிப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் தத்ரூபமாக காப்பியில் குதிப்பது போன்று தெரிகிறது.
இதை பார்த்த ரசிகர்களும் சமூக தளவாசிகளும் “என்ன ஆனாலும் காஜலின் குறும்புத்தனம் இன்னும் போகவில்லை” என்று நகையாடியுள்ளனர்.

author avatar
CineDesk