பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியி தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் தாக்கி வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிக்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால்  7 மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.

அதன்பின் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நரேந்திரமோடி கூறினார்.சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.அதன்பின் ரெம்டிசிவர் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது.மக்கள் அத்தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்படும் என கூறி போட முன்வரவில்லை.ஆனால் அத்தடுபூசிப் போட்டுக்கொள்ளும்  படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்றானது இந்தியாவில் பரவி வருகிறது.

ஓர் நாளில் மட்டும் இந்தியாவில் 30 லட்சம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.அதுமட்டுமின்றி இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் காணப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,678 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது வரை மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.முழு ஊரடங்கை அமல்படுத்தும் படி உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரையும் செய்து வருகிறது.

Leave a Comment