முடக்கு வாதம் மூட்டு வலியை பறந்தோடச் செய்யும் தேநீர்!! தினமும் ஒரு கிளாஸ் குடிங்க போதும்!

Photo of author

By Rupa

முடக்கு வாதம் மூட்டு வலியை பறந்தோடச் செய்யும் தேநீர்!! தினமும் ஒரு கிளாஸ் குடிங்க போதும்!

இன்று உணவுமுறை பழக்கம் முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறி விட்டது.இதனால் இளம் வயதிலேயே கடுமையான நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது.

நம் உடலில் பித்தம்,கபம்,வாதம் ஆகிய மூன்றும் சம அளவில் இருக்க வேண்டும்.இதில் ஏதேனும் ஒன்று மாற்றம் கண்டாலும் உடல் வலி,சோர்வு,மூட்டு வலி,முடக்கு வாதம்,பாத எரிச்சல்,முழங்கால் வலி ஆகியவை ஏற்படத் தொடங்கி விடும்.

எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உணவுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.தினமும் காலை நேரத்தில் தேயிலை தேநீர்,காபி குடிப்பதை தவிர்த்து மூலிகை தேநீர் குடிப்பது குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)புதினா இலை
3)கரு மிளகு
4)கருப்பு எள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1/4 தேக்கரண்டி கருப்பு எள் மற்றும் 4 கரு மிளகு போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் வறுத்த பொருட்களை அதில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

தண்ணீர் நிறம் மாறி வரும் வரை கொதிக்க விடவும்.பின்னர் 5 புதினா இலைகளை அதில் போட்டு ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த தேநீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன்,சர்க்கரை போன்ற இனிப்பு பொருட்கள் எதுவும் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

தேயிலை தேநீர்,காபிக்கு பதில் இந்த மூலிகை தேநீர் செய்து அருந்தி வந்தால் முடக்கு வாதம்,மூட்டு வலி பாதிப்பு சில தினங்களில் குணமாகும்.