RIB BONE PAIN: விலா எலும்பில் வலி உள்ளதா? இந்த தைலத்தை தடவினால் 5 வினாடிகளில் வலி மயமாகிவிடும்!!
விலா எலும்பில் காயம் படுத்தல் விலா எலும்பு உடைதல் முறிதல் போன்ற காரணங்களால் அவ்விடத்தில் வலி ஏற்படுகிறது.
விலா எலும்பு வலிக்கான காரணங்கள்:-
1)விலா குருத்தெலும்புகளில் அடிபடுதல்
2)குருத்தெலும்பில் வீக்கம் உண்டாதல்
3)நுரையீரல் வீக்கம்
4)பித்தகற்கள்
தேவையான பொருட்கள்:-
1)புங்கன் எண்ணெய்
2)வேப்பம்பட்டை
3)சுக்கு பொடி
4)முருங்கை பட்டை
5)கடுகு
6)வேப்பம் பூ
செய்முறை:-
ஒரு இரும்பு கடாயில் 200 மில்லி புங்கன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பின்னர் துண்டு வேப்பம்பட்டை அல்லது ஒரு தேக்கரண்டி வேப்பம்பட்டை பொடி சேர்க்கவும்.
அதன் பின்னர் ஒரு துண்டு சுக்கை இடித்து பவுடராக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
இதை நன்கு ஆறவிட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து எண்ணையில் சேர்க்கவும்.தொடர்ந்து முருங்கை பட்டை அல்லது முருங்கை பட்டை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து குறைவான தீயில் காய்ச்சவும்.
அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி வேப்பம்பூவை சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.
பிறகு இதை விலா எலும்பு பகுதியில் வலி இருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் விலா எலும்பு வலி முழுமையாக குணமாகும்.
மற்றொரு தீர்வு:-
1)கருப்பு உளுந்து
2)பார்லி
3)ஏலக்காய்
4)நாட்டு சர்க்கரை
செய்முறை:-
50 கிராம் கருப்பு உளுந்தை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து கருப்பு உளுந்து போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி விட்டு அடுத்து 25 கிராம் பார்லி மற்றும் 3 ஏலக்காயை கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
இந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இவ்வாறு செய்த பின்னர் 50 கிராம் நாட்டு சர்க்கரையை அதில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு அரைத்த பொடி 2 தேக்கரண்டி அளவு சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த கஞ்சியை தினமும் குடித்து வந்தால் விலா எலும்பு வலி காணாமல் போய்விடும்.