நம் தென் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருள் அரிசி.தண்ணீரை சூடாக்கி ஊறவைத்த அரிசியை வேகவைத்தால் சாதம் தயாராகிவிடும்.
அரிசி ஊறவைத்த நீர் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது போல் அரிசி வடித்த கஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு தீர்வாக இருக்கிறது.காய்ச்சல் வந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் ஒன்றாக கஞ்சி உள்ளது.
கஞ்சி நீரில் வேகவைத்த சாதத்தை சேர்த்து சிறிது உப்பு கலந்து பருகினால் உடல் பலம் அடையும்.கஞ்சி நீரில் மாவுச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.கஞ்சி நீர் பருகினால் உடல் எடை கட்டுக்குள் வரும்.
க்ரீன் டீ போன்றே உடல் எடையை குறைக்க கஞ்சி நீர் உதவுகிறது.தினமும் காலையில் உணவு நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் கஞ்சி தண்ணீர் பருகி வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.பசியை கட்டுப்படுத்த கஞ்சி நீர் பருகலாம்.
சாதம் வேகவைத்த நீரை சிறிது ஆறவைத்து பருக வேண்டும்.கஞ்சி நீரில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இதை பருகும் பொழுது உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
உடல் எடையை குறைக்க ஜிம் செல்வது கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது ஆபத்தான டயட் முறைகளை பின்பற்றுவது என்று ஒவ்வொரு வரும் தங்களுக்கு பிடித்த முறையில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கஞ்சி தண்ணீர் பருகலாம்.
எனவே கஞ்சி நீரை இனி கீழே ஊற்றாமல் தினமும் காலை உணவிற்கு முன் மற்றும் இதர நேரங்களில் பருகி வந்தீர்கள் என்றால் உடல் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.