வெறும் சாதம் போதும் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்!

Photo of author

By Kowsalya

வெறும் சாதம் போதும் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்!

Kowsalya

Updated on:

Just rice is enough to make the pits on the face disappear and the face becomes white!

பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள்,பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி முகத்தில் எந்த ஒரு பருக்கள் கரும்புள்ளிகள் இல்லாமல் இயற்கையாக அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை:

1. சாதம்

2. காய்ச்சாத பால்.

செய்முறை:

1. நாம் சாதம் வடிக்கும் பொழுது அதில் கஞ்சியுடன் சாதத்தை ஒரு மூன்று ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

2. இந்த சாதத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

3. அரைத்த சாற்றை ஒரு பௌலில் ஊற்றி அதில் காய்ச்சாத பால் ஒரு நான்கு ஸ்பூன் அளவு ஊற்றி கலந்து கொள்ளவும்.

4. இதை நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம். அல்லது பிரிட்ஜில் வைக்க கூடிய ஐஸ் க்யூப் ட்ரே அதில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம்.

5. ஐஸ் க்யூப் ட்ரே முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6. இந்த ஐஸ் கியூபை எடுத்து உங்கள் முகத்தில் பத்து நிமிடம் தேய்த்து பின் முகத்தை கழுவிக் கொள்ளவும்.

7. இதை பயன்படுத்தும் பொழுது சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த வேண்டாம்.

8. தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர உங்களது முகம் அழகாக மாறுவதை உங்கள் கண் கூடாக நீங்களே காணலாம்.