பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு தேவையான செலவுகளை பூர்த்தி செய்வதற்காகவும் 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் செல்வமகள் சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தற்பொழுது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக இருக்கிறது. இவற்றுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் 2 மாதங்களில் குறைய உள்ளது என்றும் அதிகப்படியான வட்டியை பெற நினைக்கக்கூடிய பெற்றோர்கள் உடனடியாக இந்த இரண்டு மாதங்களுக்குள் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்குகளை துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இணைய வழிமுறைகள் :-
✓ 21 ஆண்டுகள் டெபாசிட் திட்டமாக இந்த திட்டம் பின்பற்றப்படுகிறது. பெண் பிள்ளைகள் 10 வயதிற்கு உட்பட்டவராக இருக்கும் பொழுது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பெயரில் இந்த அக்கவுண்ட் திறக்கப்படலாம் என்றும் பத்து வயது நிறைவடைந்த உடன் பெண் பிள்ளைகளின் பேரிலேயே அக்கவுண்ட் மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ இந்த திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் சேமிப்பு மேற்கொள்ளப்படுகிறது என வைத்துக்கொண்டால் 15 ஆண்டுகளுக்கு சேமிப்பு மேற்கொண்டால் போதும் என்றும் 21 ஆண்டுகளுக்கான தொகையோடு வடியும் சேர்த்து 11.12 லட்சம் வரை முதிர்வு தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.