இந்திய அணியின் தற்போது ஃபினிஷராக இருப்பவர் தான் ரிங்கு சிங் இவர் தற்போது சமீபத்திய ஆட்டங்களில் மோசமாக விளையாடி வருகிறார். தற்போது அவர் சரியான பேட்டிங் வரிசையில் களமிறக்க படுவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க வெற்றி பெற்றது. இந்நிலையில் 1-1 என சமநிலையில் இருந்தது.
நேற்று மூன்றாவது போட்டி தொடங்கியது முதலில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கி 219 ரன்கள் அடித்து 220 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவதாக களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 208 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இந்திய அணியில் பினிஷர் ரோலில் களமிறங்கும் ரிங்கு சிங் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர் கடைசியாக 7 இன்னிங்ஸில் களமிறங்கி 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் இவர் முன்னதாக களமிறக்கப்பட்ட வேண்டும் இவரும் கேதார் ஜாதவ் போலதான் சரியான வரிசையில் களமிறக்க படுவதில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.