“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

0
162

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பற்றி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் தற்போது பண்ட் பாலிவுட் நடிகை ஊர்வசியுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகை ஊர்வசி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகிய 2018 இல் ஒருவரையொருவர் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் இந்த ஜோடி அதை வெளிப்படுத்துவதற்கு முன்பு அவர்கள் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இதை பண்ட் ஊர்வசியை ​​வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்ததாக சில தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில்தான் ஊர்வசி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றுல் “மிஸ்டர் RP என்னைப் பார்க்க பல மணிநேரம் ஹோட்டலில் காத்திருந்தார்.” எனக் கூறியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் சலசலப்பை ஏற்படுத்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு பண்ட் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதில் “சிலர் பேட்டிகளில் பொய்யான விஷயங்களை சொல்வது பார்க்க வேடிக்கையாக உள்ளது. தலைப்பு செய்திகளில் வரவும், விளம்பரம் செய்யவும் இப்படி செய்வது உண்மையில் சோகமானது” எனக் கூறியுள்ளார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே பண்ட் தன்னுடைய பதிவை நீக்கிவிட்டார். இந்த சம்பவமானது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

Previous articleஇந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!
Next articleஇந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி