இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டத்தை புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 5வது போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய 5 வது போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மேலும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்தது. முக்கிய 4 விக்கெட்டுகள் இழந்து குறைந்த ரன்களில் தவித்த போது களமிறங்கினார் ரிஷப் பண்ட் இறங்கிய முதல் பந்திலேயே சிக்சர் பறக்க விட்டார். மேலும் அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதுகுறித்து டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மற்ற பேட்ஸ்மேன்கள் 50 அல்லது அதற்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் போது பண்ட் 184 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி ரன் செர்த்தது குறிப்பிட வேண்டிய ஒன்று தான் என்று கூறியுள்ளார்.