இந்திய அணியின்  புதிய டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பண்ட்!! ரோஹித் சர்மா கடைசி கட்டத்தில் உள்ளார் முன்னாள் இந்திய வீரர் வெளியிட்ட தகவல்!!

Photo of author

By Vijay

cricket:  இந்திய அணயின் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் முகமது கைஃப்  வலியுறித்தியுள்ளார்.

நடந்து முடிந்த இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்திய அணி தனது சொந்த மண்ணில் இதுவரை அடையாத படுதோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு பலரும் இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரோஹித் சர்மா தந்து கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக யார் இந்திய அணியின் கேப்டன் என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருப்பவர் பும்ரா. இருந்தாலும் அவரை விடவும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் ஆகும் தகுதி அதிகமுள்ளவர் ரிஷப் பண்ட் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்   விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் மற்ற வீரர்களை விடவும் சிறப்பாக விளையாடி வரும் வீரர் என்றால் அது ரிஷப் பண்ட் தான். அவருக்கு இந்திய அணியின் கேப்டன் ஆகும் தகுதி உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து எந்த மைதானமாக இருந்தாலும் அவர் அந்த மைதானத்திற்கு ஏற்றவாறு தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் முன்னேறி வருகிறார். இந்தியா நியூசிலாந்து போட்டியில் அவர் காலத்தில் இருக்கும் வரை நியூசிலாந்து அணிக்கு நிம்மதி இல்லை அந்த அளவுக்கு அவர் எதிரணிக்கு பதிலடி கொடுத்து வருகிறார் எனவே அவர் அடுத்த இந்திய அணியின் கேப்டன் ஆகும் தகுதி அவருக்கு உள்ளது என தெரிவித்திருந்தார்.