மலக்குடல் பெருங்குடல் கேன்சர் ஆபத்து!! இதற்கான காரணமும் முக்கிய அறிகுறியும்!!

0
3

இக்காலத்தில் கேன்சர் பாதிப்பு பொதுவான கொடிய நோயாக மாறி வருகிறது.பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பை தான் பலரும் சந்திக்கின்றனர்.நமது மலக் குடல் பகுதியில் உருவாகும் இந்த புற்றுநோய் மலக்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.உலகளவில் பெரும்பாலான மக்கள் உயிரிழக்க காரணம் புற்றுநோய் பாதிப்பு.இது மனிதர்களை மெல்ல மெல்லக் கொள்ளும் ஒரு நோயாக உள்ளது.

புற்றுநோய் பாதிப்பு வர முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.உடலில் அதிக கொழுப்பு குவிதல்,புகைப்பிடித்தல் போன்ற காரணங்களால் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள்:-

1)நீங்கள் வெளியேற்றும் மலத்தில் இரத்தம் தென்பட்டால் அலட்சியம் செய்யக் கூடாது.இது மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

2)அதீத உடல் எடை இழப்பு,வயிறு பகுதியில் வீக்கம் ஏற்படுதல் போன்றவை மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

3)மலம் கழிப்பதில் அதிக சிரமம் இருந்தால் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதுவும் மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.

மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணங்கள்:

1)ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுதல்

2)அதிகளவு புகைபிடித்தல்

3)மோசமான வாழ்க்கைமுறை பழக்கம்

4)உடல் உழைப்பு இல்லாமை

மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்:

**அறுவை சிகிச்சை
**கீமோ தெரபி
**கதிரியக்க சிகிச்சை

உங்களுக்கு மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Previous articleபெண்கள் பிரசவத்திற்கு பிறகு தொப்பை வராமல் இருக்க பெல்ட் அணியலாமா? மருத்துவரின் தெளிவான விளக்கம்!!
Next article10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?