திண்டுக்கல் நத்தம் இடையிலான 35 கி.மீட்டா் நீள சாலையியை சுமார் 190 கோடி செலவில் விரிவாக்கப் அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. 7 மீட்டராக உள்ள சாலையை, 10 மீட்டா் அகலம் கொண்ட தாா் சாலையாக மாற்றி அமைக்க திட்டமிட்டனர். அதற்கான பணிகளும் கடந்த ஆண்டில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த சாலை குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது.
வர்த்தக மாவட்டம் என்பதால் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதனால் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற சென்ற ஆண்டு திட்டமிட்டு பணிகள் தொடங்கின. சாணர்பட்டி அருகே இப்பணிக்கு தேவையான மணல், ஜல்லிக் கற்களை சாலையிலேயே கொட்டியுள்ளனர். கொரோனாவால் பணிகள் சற்று மந்தமாகவே நடைபெறுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும், வாகனத்தால் கிளம்பும் புழுதியால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் என்ன இருக்கிறது என்று எதுவுமே தெரிவதில்லை. சாலைகள் ஆங்காங்கே குழிகள் இருப்பதால், மழை பெய்யும் காலங்களில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கின்றன. ஆதலால், பணிகளை சற்று விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில், சாலையில் கொட்டியுள்ள மணல், கற்களை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.