கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !! 

கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !! 

கொள்ளை அடிப்பதற்காக தம்பதியை வழிமறித்த கும்பல் பின்னர் செய்த செயல் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லியின் ஷாஹ்தராவின் ஃபர்ஷ் பஜார் பகுதியில் இந்த வினோதமான சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு சாலையில் ஒரு வயதான தம்பதியினர் நடந்துச் செல்கின்றனர். அவர்களை வழிமறித்த கொள்ளையன் அவர்களிடம் நகையோ பணமோ இல்லை என தெரிந்ததும் ரூ.100 கொடுத்து விட்டுச் சென்றுள்ளான்.

இவை அங்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் ஸ்கூட்டியில் வந்த கொள்ளையர்களில் ஒருவன் இறங்கி சாலையில் நடந்துச் சென்ற தம்பதியை கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டி உள்ளான்.

போதையில் இருந்த கொள்ளையனை கண்டதும் பயந்த தம்பதி தங்களிடம் நகையோ பணமோ இல்லை என கூறியுள்ளனர். மேலும் நகைகள் அனைத்தும் போலியானவை எனவும் அவனிடம் கூறினர்.

ஆனால் நம்பாத கொள்ளையன் அந்த ஆணை சோதனை செய்து பார்க்க அவரின் பாக்கெட்டில் வெறும் 20 ரூபாய் நோட்டு மட்டும் தான் இருந்தது. இதைக் கண்டு மனம் மாறி பரிதாபம் கொண்ட திருடன் தங்களிடம் இருந்த 100 ரூபாய் நோட்டினை கொடுத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.