Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

0
78

Telegram ஆப் மூலம் பார்ட் டைம் வேலை தருவதாக கூறி 10 லட்சம் வரை பணமோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து சைபர் கிரைம் வெளியிட்ட தகவல் :-

 

சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி டெலிகிராம் செயலி வாயிலாக பகுதி நேர வேலை தருவதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில், Telegram செயலி மூலம் அவர்கள் கொடுக்கும் டாஸ்க் செய்து முடித்தால் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கி பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்கின்றனர்.

 

2024 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில், புகார்தாரரிடம் Telegram-ல் எதிரி தன்னை “Room Raccoon Backend Website” எனும் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களது நிறுவனம் வாடிக்கையாளர்கள் மதிப்பீடு அளிப்பதன் அடிப்படையில் ஹோட்டல்களை முதன்மைப்படுத்தும் பணியை செய்து வருவதாக கூறி ஆன்லைன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணியை செய்தால் உங்களது வங்கி கணக்கிற்கு தினந்தோறும் அதற்கான கமிசன் வரவு வைக்கப்படும் என நம்ப வைத்து போலியான “Room Raccoon Backend Website”-ல் புகார்தாரரை நம்பவைப்பதற்காக முதலில் மதிப்பீடு செய்ய வைத்து அதற்கான கமிசனாக ரூ. 959./- வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

 

இவ்வாறாக ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விதமான டாஸ்கை கொடுத்து இறுதியில் ரூ.7,31,166/- பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டு மேற்படி வேலை முடித்தவுடன் அவருடைய கணக்கில் கமிசனுடன் சேர்ந்து ரூ.10,90.000/- பணம் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேற்படி பணத்தை புகார்தாரரால் எடுக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து மேலும் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்ய அறிவுறுத்தியதன் பேரில் சந்தேகம் ஏற்படவே பாதிக்கப்பட்டவர் சைபர் குற்றம் ரிபோர்டிங் போர்டல் இல் புகார் பதிவு செய்துள்ளார்.

 

அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய குற்ற எண்:55/2024, u/s 66 D of the Information Technology Act 2000, Section 318 (4) of the BNS Act- என வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.

 

இந்த குற்றத்தை செய்தவர்களான கௌதம் மற்றும் அவரின் உறவினர்களை கைது செய்து 01-12-2024 அன்று திருப்பூர் மாவட்ட சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

 

சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க சைபர் கிரைம் மூலம் வழங்கப்பட்ட ஆலோசனைகள் :-

 

✓ பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை என்ற பெயரில் வரும் விளம்பரங்களை நம்பி அதிக பணம் வரும் என பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

 

✓ தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.

 

✓ உங்கள் வங்கி மற்றும் கடன் பெற்ற கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.

 

✓ மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

✓ யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

சைபர் குற்றங்களுக்கு ஆளாகி இருந்தால் அவர்கள் புகாரை பதிவு செய்யும் முறை :-

 

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம்கட்டணமில்லாஉதவி எண்1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

Previous articleநேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!
Next articleபாலச்சந்தரிடம் திமிராக கேள்வி கேட்ட ரஜினிகாந்த்!! சட்டென பதில் சொன்ன இயக்குனர்!!