நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

0
202
#image_title

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,

செங்கல்ப்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பக்கத்தில் உள்ள அனுமந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் சையது வயது 22. இவரின் பூர்விகம் மேற்கு வங்காள மாநிலமாகும். இஸ்மாயில் தனது மாநிலத்தில் இருந்து தமிழ் நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கி இருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இஸ்மாயில் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரின் செல்போனை கேட்டுள்ளனர். இஸ்மாயில் மறுக்கவே அந்த கும்பல் கத்தியால் அவரை சராமாரியாக வெட்டி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.

இஸ்மாயில் போட்ட சத்தத்தின் காரணமாக வெளியே ஓடிவந்த அருகில் இருந்தவர்கள்  வந்து பார்த்த போது மர்ம நபர்கள் தப்பிச்செல்லவே அவர்கள் காயமடைந்த இஷ்மாயிலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலை நகர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர். நடந்து போன வாலிபரிடம் செல்போனை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous article1 பட்டனை கிளிக் செய்தால் போதும்.. பணியிட மாறுதல் வாங்கிக்கொள்ளலாம்!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!
Next articleகனிமவள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி