சரியான பதிலடி கொடுத்த ரோபோ ஷங்கர்!! இணையத்தில் வைரலாகும் போட்டோ!!

Photo of author

By CineDesk

சரியான பதிலடி கொடுத்த ரோபோ ஷங்கர்!! இணையத்தில் வைரலாகும் போட்டோ!!

CineDesk

Robot Shankar gave the right response!! Photo going viral on the internet!!

சரியான பதிலடி கொடுத்த ரோபோ ஷங்கர்!! இணையத்தில் வைரலாகும் போட்டோ!!

தனது உன்னதமான திறமையின் மூலமாக சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து, பிறகு வெள்ளித்திரையில் நகைச்சுவையாலும், மிமிக்கிரி யாலும் பெரும் ரசிகர்களை தனது வலையில் சிக்க வைத்த ஒரு நடிகர் தான் ரோபோ ஷங்கர் ஆவார்.

இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும், இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவ்வாறு திரைப்படங்களில் எப்போதுமே பிசியாகவே இருக்கும் ரோபோ ஷங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணத்தின் பாதை வரை சென்று திரும்ப உயிர் பெற்றுள்ளார்.

இவர் மது அதிகமாக அருந்திய காரணத்தினால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளானார். இது திரையுலகில் சில நாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இனி இவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று பலரும் கருத்துக்களை கூறி வந்த நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவரின் உடல்நலம் சரியான பிறகு இவர் மேற்கொண்டு வருகின்ற செயல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தற்போது இவரது மகள் இந்திரஜா வின் திருமண பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த குஷியில் தான் இவர் தெம்பாக இருக்கிறாரா என்னும் விமர்சனங்களும் திரையுலகில் பரவி வருகிறது.

மேலும், இவர் தனது மனைவியுடன் ரீல்ஸ் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.