cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய கேப்டன் பாதி தொடரிலிருந்து விலகுகிறாரா? என கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஏற்கனவே இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் 1-1 என நிலையில் சமநிலையில் உள்ளன.
கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இதனை தொடர்ந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளனர். ஆஸ்திரேலியா தொடரில் முதல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை அப்போது தற்காலிக கேப்டன் பும்ரா இருந்தார். அதில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இரண்டாவது போட்டியில் ரோகித் அணியில் இணைந்தார். அந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். இதனால் நீங்கள் ஓய்வு பெற்று கொள்ளுங்கள், கேப்டன் பதவி இல்லை என்றால் அணியில் இடமில்லை என்றும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மூன்றாவது போட்டியில் ரோகித் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் மூன்றாவது ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களில் ஆட்டமிழந்த பின் பெவிலியன் திரும்பும்போது தனது கிளவுஸை புல் தரையில் வைத்து விட்டு சென்றுள்ளார். இவர் இதை மீண்டும் பேட்டிங் செய்ய மாட்டேன் என்ற எண்ணத்திலும் ஓய்வை அறிவிக்க போகிறாரா? என்றும் பலவிதமான கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.