இந்தியா-ஆஸ்திரேலியா தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் ரோஹித் சர்மா என தகவல் வெளியான நிலையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ குழுவின் 6 மணி நேர மீட்டிங்கிற்கு பின் அவர் நாளை ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடியது ஆனால் அந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதுவரை 0-3 என்ற நிலையில் இந்திய அணி தோல்வி அடையாத நிலையில் தற்போது இந்த தொடரில் அந்த தோல்வியை அடைந்துள்ளது.
இதனால் நேற்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா பிசிசிஐ குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 6 மணி நேரம் விவாதம் தொடரப்பட்டது. இதில் இந்த தோல்வி குறித்து பல கேள்விகள் கேட்கப்பது. மேலும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன் பிறகு நாளை மற்றும் மறுநாள் இந்திய அணி இரு குழுக்களாக ஆஸ்திரேலியா மெல்போர்ன் மைதானம் செல்ல உள்ளது. இந்த குழுவுடன் இணைந்து ரோஹித் சர்மா வேறு வழியே இல்லாமல் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த போட்டியில் 4 போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது இந்திய அணி.