இந்திய மற்றும் ஆஸ்திரேலிய இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த முடிந்த 2 வது போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதன் பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடும் விமர்சனங்களுக்கு உள்ளானர். தற்போது வரை பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கலினன் அவரின் உடல் எடையை வைத்து கிண்டல் செய்துள்ளார். அவர் கூறுகையில் ரோஹித் சர்மா பிளாட் பிட்ச்சில் மட்டும் ரன்கள் அடிப்பார். பவுன்சர் உள்ள பிட்சிகளில் அவர் ரன்கள் குவிப்பதில்லை. அதனால் அவர் ஒரு பிளாட் பிட்ச் ப்ளேயர் என்றே நான் சொல்வேன்.
மேலும் அவர் நியூசிலாந்து தொடரில் 6 இன்னிங்ஸில் விளையாடிய அவர் 92 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனக்கு தெரிந்து அவர் சொந்த மண்ணில் மட்டுமே ரன்கள் குவித்து வருகிறார். வெளிநாடுகளில் ரன்கள் குவிப்பதில் திணறி வருகிறார். இந்த ஆஸ்திரேலியா தொடரில் இரண்டு இந்நிக்சில் 3 மற்றும் 6 என விக்கெட்டை விட்டு கொடுத்தார்.
நான் கண்டிப்பாக அவரை ப்ளேயிங் லெவனில் எடுத்திருக்க மாட்டேன் என்னுடைய அணியில் அவருக்கு இடமில்லை. அவர் பிட்னஸில் சரியாக இல்லை அதிக உடல் எடையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு பிறகு அவர் ஓய்வு அறிவித்து விடலாம் என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளறி உள்ளது.