ரோகித் சர்மா ஒரு கசாப்பு ஆடு.. வெளுத்தெடுத்த இந்திய வீரர்!! மீண்டும் தொடக்க வீரரா??

0
104
Rohit Sharma is a goat for slaughter
Rohit Sharma is a goat for slaughter
Cricket : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவது குறித்து இந்திய முன்னாள் வீரர் விளாசல்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் முதல் இரண்டு போட்டியில் முடிவடைந்தது.
மூன்றாவது போட்டிக்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பின் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும் பேட்டிங் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தோ தோ கணேஷ் கருத்து தெரிவித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் மீண்டும் தொடக்க வீரராக களம் இறங்கினால் அவர் ஒரு கசாப்பு செல்லும் ஆடு என்று கூறியுள்ளார். சமீப காலங்களில் ரோகித் சர்மா பேட்டிங்கில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளார்.
மேலும் ரோகித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. முதல் போட்டியில் தொடக்க வீரராக கே.எல். ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்காமல் மிடில் ஆர்டரில் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous articleஇந்திய அணி கோரிக்கையை ஏற்காத ஆஸ்திரேலியா.. தவிக்கும் வீரர்கள்!! பயிற்சியில் ஏற்படும் சலசலப்பு!!
Next articleகிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!