அவரே ஃபார்ம்  அவுட்டில் இருக்கிறார்!!  ரோஹித் சர்மா ரன்குவிக்க வேண்டும் என்றால் இதை செய்ய வேண்டும்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணி அடுத்து விளையாட உள்ள ஆஸ்திரேலியா தொடரில் ரன் குவிக்க ரோஹித் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை.

இந்திய மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியானது நவம்பர் 22 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சரியான பார்ம் ல் இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் மோதியது. அனல இந்த தொடரின் 3 போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது. இந்த தோல்வி பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தனர். ரோஹித் மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டம் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன்  5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து உடனான தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலியா உடனான போட்டியில் 4 போட்டிகள் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

மேலும் ரோஹித் சர்மா பேட்டிங் குறித்து அறிவுரை கூறியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில் ஆஸ்திரேலியா மைதானத்தில் முதல் 15 அவர்களுக்கு தான் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும். அதுவரை சரியான ஷாட் களைத் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும்.  அவசரப்பட்டு  அடித்து ஆட முயற்சி செய்து விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்தால் ரோஹித் சர்மா நிச்சயம் ரன் குவிப்பார் என்று கூறியுள்ளார்.