4 வது போட்டியில் ரோகித் சர்மா இல்லை.. பயிற்சியில் ஏற்பட்ட திடீர் சம்பவம்!!

0
131
Rohit Sharma not in 4th match
Rohit Sharma not in 4th match

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது போட்டியின் பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே மூன்று போட்டியில் நடந்து முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி சமணில் முடிவடைந்தது.

அடுத்து நடைபெற உள்ள 2 போட்டிகளில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தீவிர வலைப்பேச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது சமூக வலைதளவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதனால் அடுத்து நடைபெற உள்ள நான்காவது போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே விளையாடிய போட்டிகள் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார் இந்நிலையில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா அல்லது மாற்றுவீரர் களமிறங்குவாரா என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது

Previous articleசன்னி லியோனுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை!! சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோசடியால் அதிர்ச்சி!!  
Next articleமகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல!! சர்ச்சையை கிளப்பிய பாடகர்!!