டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

Photo of author

By Parthipan K

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் பதினொரு வீரர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டது பிசிசிஐ.

வீரர்கள் விவரம்:
1. ரஹானே(கேப்டன்)
2. ரோஹித்(துணை கேப்டன்)
3. கில்
4. புஜாரா
5. விஹாரி
6. பன்ட்
7. ஜடேஜா
8. அஸ்வின்
9. பும்ரா
10. சிராஜ்
11. சைனி

இதில் சைனி டெஸ்ட்டில் முதன்முதலாக அறிமுக வீரராக விளையாட இருக்கிறார். காயம் காரணமாக ராகுல் விளையாடவில்லை. காயம் காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரோஹித் ஷர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக நாளை களமிறங்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் துணைகேப்டனா அறிவித்திருப்பதால் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் நிறைய ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரால் அந்த அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர் டெஸ்ட் போட்டிகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது வீரராக களம் இறங்குவதாகும். தோனி ஒருநாள் போட்டிகளில் ரோஹித்தை ஓபனிங் ஆடவைத்தது போல டெஸ்ட் போட்டிகளிலும் ஓபனிங் ஆடவைக்க கேப்டன் கோஹ்லியும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் 2019ஆம் ஆண்டு முடிவு செய்தனர்.

2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக ஓபனராக ஆடவைக்கப்பட்டார் ரோஹித் ஷர்மா. ஓபனராக இறங்கிய ரோஹித் ஷர்மா இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் அபாரமாக விளையாடி சதம் அடித்து சாதனை படைத்தார். அதன் பிறகு காயம் காரணமாக அவரால் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடமுடியவில்லை. தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் விளையாட இருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.