ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா?
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சாதனையை முறியடிக்க அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தவறவிட்டால் இந்த சாதனைக்காக அவர் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கடைசி 5-வது டெஸ்ட் தொடர் வருகின்ற 7-ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதுடன் பல வரலாற்று சாதனைகளையும் படைத்துள்ளார். வருகின்ற 5-வது டெஸ்ட் தொடரில் அவர் 77 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் மாபெரும் வாழ்நாள் வரலாற்று சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைக்க உள்ளார்.
அடுத்ததாக அவரைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீரின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 58 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கௌதம் கம்பீர் 4154 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனை மூலம் அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கௌதம் தற்போது வரை 16- வது இடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா 58 போட்டிகளில் விளையாடி 4035 ரன்கள் உடன் 17 – வது இடத்தில் உள்ளார். தர்மசாலாவில் நடைபெறும் 5- வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 120 ரன்கள் அடித்தால் கௌதம் கம்பீரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்திற்கு முன்னேறுவார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சில மாதங்களுக்கு எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. எனவே ரோகித் சர்மா இந்த போட்டியை தவறவிட்டால் கௌதம் கம்பீரின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கம்பீரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. நிறைவேற்றுவாரா ரோகித் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கான பதில் வருகின்ற 7-ஆம் தேதி கிடைத்து விடும்.