இந்திய நியூசிலாந்து தோல்விக்கு பிகு பல விமர்சனங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பயிற்சியாளர் கம்பீர் மீது எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தவான் நியூசிலாந்து அணியிடம் தோற்றால் பரவாயில்லை ஆஸ்திரேலியா அணியிடம் வெற்றி பெற்று நிச்சயம் சாதிப்பார் ரோஹித் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை. இதற்கு முன் 12 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி இது போன்ற சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. அதன் பின் தற்போது அந்த சாதனையை முறியடித்து நியூசிலாந்து அணி.
இதனால் பலரும் ரோஹித் கேப்டன்சி சரியில்லை என்று கூறினார்கள், அவரும் இந்த தோல்விக்கு முழுவதும் நான் பொறுப்பேற்கிறேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மண்ணில் நாம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடரை வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு தொடர்களாக நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அதே போல் இந்த மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ரோஹித் மற்றும் விராட் கோலி அதிக அளவு போட்டிகளில் விளையாடியுள்ளார் அவர்களின் அனுபவம் இளம் . வீரர்களுக்கு கை கொடுக்கும் அவர் இந்த போட்டியில் நிச்சயம் சாதிப்பர் என்று கூறியிருந்தார்.