கிண்டல் செய்த ரோஹித்..அஸ்வின் பயிற்சியாளரா?? பிசிசிஐ கதவுகள் திறந்தே இருக்கும்!!

0
159
Rohit teased
Rohit teased

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா அணி உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் 14 ம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டியானது இன்று சமனில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த போட்டிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின் மற்றும் ரோஹித். அஸ்வின் தான் அடிலெய்டு மைதானத்தில் விளையாடிய போட்டி தனது கடைசி போட்டி என கூறி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

அதன்பின் ரோஹித் சர்மா விடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அஸ்வின் மற்றும் ரஹானே,புஜாரா இவர்கள் பயிற்சியாளராக இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார்களா என கேள்வி எழுப்பப்பட்டது.   இதற்கு பதிலளித்த அவர் அடுத்த புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார். ஆனால் ரஹானே மற்றும் புஜாரா இன்னும் வெளியேறவில்லை அவரகளுக்காக பிசிசிஐ கதவுகள் திறந்தே இருக்கும்.

மேலும் ரஹானே உடன் இணைந்து பயணிக்கவில்லை என்றாலும் அவரை நான் சந்தித்து பேசி தொடர்பில் இருந்து தான் வருகிறேன். அதுபோலதான் புஜாராவும் என கூறினார். நீங்கள் கேட்கும் கேள்விகளால் எண்ணை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விட்டீர்கள் என கிண்டலாக பதிலளித்தார் ரோஹித்.

Previous articlePregnancy போட்டோ ஷூட்!! நெட் வலையை உடையாக அணிந்து அத்து மீறிய நடிகை ராதிகா ஆப்தே!!
Next articleபுஷ்பா-2  அம்மாவை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!! மீண்டும் சிறை செல்லும் அல்லு அர்ஜுன்!!