ரஞ்சி கோப்பையில் ரோகித் விராட்.. சொன்னதை செய்யாத பிசிசிஐ!! நைசாக தப்பித்த கம்பீர்!!

0
143
Rohit Virat in Ranji Trophy
Rohit Virat in Ranji Trophy

cricket: இந்திய அணியின் கேப்டன் மற்றும் விராட் கோலி, கம்பீர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பிசிசிஐ.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த மொத்த 5 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.

இந்த பார்டர் கவாஸ்கர் போட்டியில் தோல்வியடைந்த பின் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோஹித், விராட் ஆகியோரின் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க போவதாக தகவல்கள் வெளியானது. இதில் டிவிஸ்ட் என்னவென்றால் அது போன்ற இந்த மூன்று பேர் மட்டும் உள்ள ஓர் மீட்டிங் வைத்தும் அவர்களை எந்த கேள்வியும் பிசிசிஐ கேட்கவில்லை.

இந்நிலையில் பிசிசிஐ சொன்னது போல அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை செய்யவில்லை. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில் அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் தான் நமது இலக்கு. அதற்கு மீண்டு வர தீவிர பயிற்சியை மேற்கொள்ளுங்கள். ரோஹித் மற்றும் விராட் இருவரும் நிச்சயம் அணியில் இடம் பெறுவார்கள். மேலும் இதுபோன்ற பேட்ஸ்மேன் செய்யும் தவறுக்கு பயிற்சியாளர் ஏதும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது. ரோஹித் மற்றும் விராட் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட வலியுறுத்த படுவார்கள் ஆனால் ஓய்வு கேட்டால் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது

Previous articleஇன்று தங்கம் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது!!
Next articleகார் ரேஸ் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து!! ஒரு கீறல் கூட இன்றி தப்பித்த அஜித்குமார்!!