இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது சிட்னி மைதானத்தில் 5 வது போட்டியானது 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த 5 வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அவர் இந்த தொடருக்கு முன் நியூசிலாந்து தொடரில் 6 இன்னிங்ஸில் விளையாடி 92 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் 5 இன்னிங்ஸில் விளையாடி 32 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் அவர் 5 வது போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியை பும்ரா தலைமை தாங்கினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் ரோஹித் ஓய்வு குறித்து கருத்து கூறியுள்ளார், அதில் ரோஹித் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினமான ஒன்று அவருக்கு 37 வயது ஆகிறது. அவர் விளையாட்டின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெற இன்னும் 6 மாதங்கள் உள்ளது இதுதான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.