Breaking News, Sports

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனை… ஹிட்மேனின் புதிய ரெக்கார்ட்

Photo of author

By Vinoth

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனை… ஹிட்மேனின் புதிய ரெக்கார்ட்

Vinoth

Button

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனை… ஹிட்மேனின் புதிய ரெக்கார்ட்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்தது. அந்த போட்டிக்குப் பின்னர் டி 20 தொடர் நடந்தது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில் இப்போது ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 5 சிக்ஸ்களை விளாசி அரைசதம் அடித்தார்.

இந்த போட்டியில் அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் படைக்காத சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர் 126 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 230 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹிட்மேன் ரோஹித் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இயக்குனர் அமீரின் தாயார் காலமானார்… திரையுலகினர் இரங்கல்!

கோத்தபய பதுங்கிவுள்ள இடம் குறித்து வெளியான புதிய தகவல்!! இலங்கையில் பரபரப்பு !.

Leave a Comment