“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து!

Photo of author

By Vinoth

“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து!

இந்திய அணிக்கு இப்போது பல இளம் கேப்டன்கள் கிடைத்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் பதவியை சமீபத்தில் விராட் கோலி ராஜினாமா செய்ததை அடுத்து மூன்று பார்மட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ரோஹித் ஷர்மா. அதுமட்டும் இல்லாமல் ரிஷப் பண்ட், கே எல் ராகுல்,  ஹர்திக் பாண்ட்யா, பூம்ரா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர் என பல இளம் வீரர்கள் கேப்டன் தகுதிகளோடு வளர்ந்து வருகின்றனர்.

ரோஹித் ஷர்மா இல்லாத போது இவர்கள் அணியை தலைமை தாங்குகுகின்றனர். இவர்களுக்கு ஐபிஎல் தொடரில் கேப்டனாக பணியாற்றிய அனுபவம் பெரியளவில் உதவுகிறது. தங்கள் தலைமையில் சில போட்டிகளை வென்று கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படி பல கேப்டன்கள் உருவாவதற்குக் காரணம் ஐபிஎல் தொடர்தான் காரணம் என இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் “ஐபிஎல் தொடரால் அணிக்குப் பல கேப்டன்கள் கிடைத்துள்ளனர். அவர்களுக்கு அணியை வழிநடத்தும் அனுபவத்தை ஐபிஎல் தொடர் கொடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டில் பெரும்பாலான அணிகள் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளுக்கும் ஒவ்வொருவரை கேப்டனாக நியமித்து கேப்டன்கள் மீதான அழுத்தத்தை குறைத்து வருகின்றனர். விரைவில் இந்திய அணிக்கும் இதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட கேப்டன்கள் நியமிக்கப்படலாம்.