இந்திய தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியை தழுவியது. மேலும் முதல் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க முடியவில்லை அதனால் முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக இருந்தார். இரண்டாவது போட்டிக்கு ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினார்.
இதற்கு முன் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் நடந்த 3 போட்டிகளில் இந்திய அணி படு தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து ரோஹித் சர்மா கேப்டன்சி செய்த 4 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணி ரசிகர்கள் பலரும் முதல் போட்டியை தொடர்ந்து இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் கேப்டனாக தற்போது துணை கேப்டனாக உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.