cricket: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ரோஹித் குறித்த கேள்விக்கு மழுப்பிய நிகழ்வு.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் முக்கிய மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் மிக முக்கியமாக ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் கம்பீர் அளித்த பதில் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் இல்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய முதல் போட்டியில் கேப்டனாக பும்ரா விளையாடினார் அந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது இது ஒரு போட்டி மட்டும்தான். அதன் பின் ஒரு தோல்வி ஒரு சமன் என முடிவடைந்தது. நாளை சிட்னியில் தொடங்கவுள்ள 5 வது போட்டி முக்கியமான போட்டியாக பார்க்கபடுகிறது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீரிடம் அடுத்த போட்டியில் ரோஹித் விளையாடுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எந்த ஒரு நிச்சய பதிலும் சொல்லவில்லை. அவர் அது பிட்சை பொறுத்தது. நாங்கள் மேட்ச் தொடங்கும் முன் பிட்ச் எப்படி என்பதை பார்த்த பிறகுதான் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பதை சொல்வோம் என கூறியுள்ளார். இதில் அவர் சந்தேகமாக பதிலளித்த நிலையில் அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.