நமது ஆயுர்வேத மருத்துவத்தில் ரோஜா குல்கந்து அருமருந்தாக திகழ்கிறது.இதில் ஏரளமான கால்சியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இது வாசனை மற்றும் சுவை நிறைந்த ஒரு மருந்தாகும்.
ரோஜா குல்கந்து செய்வது எப்படி?
10 முதல் 20 பன்னீர் ரோஜா பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ரோஜா எதலைகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
பிறகு இதை காட்டன் துணியில் பரப்பி நன்கு உலர வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு பெரிய கற்கண்டுடன் இந்த பன்னீர் ரோஜா இதழ்களை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.விருப்பப்பட்டால் இதில் கசகசா மற்றும் வெள்ளரி விதைகளை சேர்த்து அரைக்கலாம்.
பேஸ்ட் பதத்திற்கு அரைக்க கூடாது,.கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி 10 நாட்களுக்கு ஊறவிட்டால் ரோஜா குல்கந்து தயார்.
இதை பாலில் கலந்து பருகி வந்தால் உடல் சூடு,வியர்க்குரு உள்ளிட்டவை நீங்கும்.இரைப்பை எ;அலர்ஜி இருப்பவர்கள் ரோஜா குல்கந்தில் தேன் கலந்து சாப்பிடலாம்.அல்சர்,வயிறு புண் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் ரோஜா குல்கந்தை பாலில் கலந்து சாப்பிடலாம்.
மூக்கில் இரத்தம் வடிதல்,இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் ரோஜா குல்கந்தை சூடான நீரில் கலந்து பருகலாம்.பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் வலியை ரோஜா குல்கந்து சரி செய்கிறது.
ஒரு வெற்றிலையில் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து சேர்த்து மடித்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும்.கருப்பை கட்டி,அனீமியா தொந்தரவுகளை இவை சரி செய்கிறது.