மீண்டும் மிரட்ட வருகிறார் ரோலக்ஸ்… நடிகர் சூரியா அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல் இதோ!!

0
34

 

மீண்டும் மிரட்ட வருகிறார் ரோலக்ஸ்… நடிகர் சூரியா அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல் இதோ…

 

நடிகர் சூரியா அவர்கள் சமீபத்தில் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தான் அடுத்தடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்களை பற்றி தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

 

நடிகர் சூரியா மற்றும் அவருடைய ரசிகர்கள் சந்திக்கும் சூரியா பேன்ஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் சூரியா அவர்கள் கலந்து கொண்டு பேசினார். மேலும் ரசிகர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூரியா அவர்கள் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்களை பற்றியும் பேசினார்.

 

அந்த வகையில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி தான்(சூரியா) நடித்து வரும் கங்குவா திரைப்படத்தை பற்றி “கங்குவா திரைப்படம் நமது அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும். நாம் எதிர்பார்த்த அளவை விட 100 மடங்கு அதிகமாக கங்குவா திரைப்படம் இருக்கப் போகின்றது” என்று கூறினார்.

 

மேலும் இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூரியா 43 திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறினார். மேலும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பானது விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தொடங்கும் என்று கூறினார்.

 

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கடைசி 10 நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சூரியா நடித்து மிகவும் பிரபலமடைந்தார். அந்த ரோலக்ஸ் கதாப்பாத்திரம் பற்றி நடிகர் சூரியா அவர்கள் “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு திரைப்படம் எடுக்கும் ஐடியா உள்ளதாக என்னிடம் கூறினார். எனக்கு மிகவும் பிடித்தது. ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு மட்டும் தனியாக ஒரு திரைப்படம் மிக விரைவில் உருவாகும்” என்று கூறினார். அது மட்டுமில்லாமல் இரும்புக்கை மாயாவி திரைப்படத்தின் படப்பிடிப்பு ரோலக்ஸ் திரைப்படம் முடிந்த பிறகு தொடங்கும் எனவும் கூறினார். இதையடுத்து ரசிகர்களின் மத்தியில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் எக்ஸ் பக்கத்தில் ரோலக்ஸ் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.